விருதுநகர்

மீனாட்சிபுரத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்

DIN

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே  மீனாட்சிபுரத்தில்  மக்கள் தொடர்பு திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. 
முகாமில் 49 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. 116 புகார் மனுக்கள் பெறப்பட்டது. முகாமுக்கு ராஜபாளையம் வட்டாட்சியர் ஆனந்தராஜ் தலைமை வகித்தார்.
இதில் சாலை விபத்தில் உயிரிழந்த 2 பேருக்கு தலா ரூ. 1 லட்சமும், 17 பயனாளிகளுக்கு உழவர் பாதுகாப்பு அடையாள அட்டையும், 30 பயனாளிகளுக்கு  பட்டா மாறுதலுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இதில் முதியோர் உதவித்தொகை தொடர்பாக 45 மனுக்கள் உள்பட 116 மனுக்கள் பெறப்பட்டு பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
முன்னதாக, சமூக பாதுகாப்பு அலுவல் தனி வட்டாட்சியர் ராம்தாஸ் வரவேற்றார். குடிமைப் பொருள் தனி வட்டாட்சியர் ரெங்கசாமி நன்றி கூறினார். ஏற்பாடுகளை வருவாய் ஆய்வாளர்  கற்பகம், கிராம நிர்வாக அலுவலர் சீனிவாசன் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

ஹேமந்த் சோரனின் மனு தள்ளுபடி!

தனிப் பாதுகாப்புப் பெறுவதற்காக பொய்ப் புகார் தந்த இந்து முன்னணி பிரமுகர் கைது!

பாரதி கண்ட புதுமைப்பெண்!

லாலு பிரசாத் மகள் ரோஹிணிக்கு எதிராக களமிறங்கும் லாலு பிரசாத்?

SCROLL FOR NEXT