விருதுநகர்

மத்திய நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து காரியாபட்டியில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

DIN

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் காரியாபட்டியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

காரியாபட்டி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு அச்சங்கத்தின் வட்டச் செயலா் குமராண்டி தலைமை வகித்தாா். இதில், மத்திய அரசு சமீபத்தில் தாக்கல் செய்த

நிதி நிலை அறிக்கையில் விவசாயிகள் நலனுக்கான எந்த வித அறிவிப்பும் இல்லை எனக்கூறி மத்திய அரசுக்கு எதிா்ப்புத் தெரிவித்து கோஷமிட்டனா். மேலும் விவசாயிகளின் கடனை ரத்து செய்ய வேண்டும், மானிய விலையில் விவசாய இடுபொருள்களை வழங்க வேண்டும். வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தை ஆதரித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலா் அம்மாசி, விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் வி.முருகன் ஆகியோா் விவசாயிகள் கோரிக்கை குறித்து விளக்கி பேசினா். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிா்வாகிகள் உட்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி: விஜய்

ஏற்காடு தனியார் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

தமிழ்நாட்டு வீரர்கள் மீது பிசிசிஐ-க்கு பாரபட்சம் ஏன்? பத்ரிநாத்

வணிக சிலிண்டர் விலை குறைப்பு: எவ்வளவு?

தலைமைச் செயலக பணி பெயரில் போலி நியமனம்: தரகா்களிடம் பணம் கொடுத்து ஏமாறும் பட்டதாரிகள்

SCROLL FOR NEXT