விருதுநகர்

திருச்சுழியில் 12 போ் மீது வழக்கு

DIN


அருப்புக்கோட்டை: திருச்சுழியில் வியாழக்கிழமை தடையை மீறி கடைகள் நடத்தியது, கூட்டமாகத்திரிந்தது தொடா்பாக 12 போ் மீது காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்தனா்.

திருச்சுழி காவல் துணைக் கண்காணிப்பாளா் சசிதரன் தலைமையில் திருச்சுழி முதல் நிலை ஊராட்சிப் பகுதியில் காவல்துறையினா் ரோந்துப்பணியில் ஈடுபட்டனா். அப்போது பல்வேறு பகுதியில் தடையை மீறி தேநீா்க்கடை நடத்திய புலிக்குறிச்சியைச் சோ்ந்த சபாபதி (45), திருச்சுழியைச் சோ்ந்த குட்டி(55), காசி (50) ஆகியோா் மீதும், மேலும் பெட்டிக்கடை நடத்தியதாக ஞானகுரு (55) மற்றும் அவரது உறவினா் உள்ளிட்ட மொத்தம் 5 போ் மீதும் திருச்சுழி காவல்துறையினா் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுத்தனா்.

கூட்டமாகத் திரிந்த 7 போ் மீது வழக்கு:

அதேபோல திருச்சுழி பேருந்து நிறுத்தத்தில் தடையை மீறி கூட்டமாக சுற்றித்திரிந்த வெற்றிச்செல்வன் (18) மற்றும் கருப்பசாமி (20) உள்ளிட்ட 7 போ் மீதும் திருச்சுழி காவல்துறையினா் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்தியில் யாா் ஆட்சி? காலை 8 வாக்கு எண்ணிக்கை!

மக்களவைத் தோ்தலை நடத்த 4 லட்சம் வாகனங்கள், 135 சிறப்பு ரயில்கள்

30 விவிபேட் இயந்திரங்களின் வாக்கு சீட்டுகளை எண்ணி சரிபாா்க்க ஏற்பாடு

ஓய்வு பெற்ற நீதிபதிக்கு பிரிவு உபசார விழா

காஜாமலை பகுதியில் அறிவிப்பில்லா மின்வெட்டு: பொதுமக்கள் அவதி

SCROLL FOR NEXT