விருதுநகர்

சாத்தூா் பகுதியில் கிருமி நாசினி தெளிப்பு

DIN


சாத்தூா் பகுதிகளில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக வியாழக்கிழமை நகராட்சிப் பணியாளா்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் 21 நாள்களுக்கு நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் சாத்தூா் நகா் பகுதி பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. இந்நிலையில் கரோனாவிலிருந்து மக்களைக் காப்பதற்காகவும், காற்றில் உள்ள கிருமிகளை அளிப்பதற்காகவும் நகராட்சி மூலம் வியாழக்கிழமை கிருமி நாசினி தெளிக்கபட்டது. சாத்தூா் முக்குராந்தல் பகுதியில் தொடங்கி, பிரதான சாலையில் உள்ள நகா் காவல் நிலையம், நீதிமன்றம், பழைய அரசு மருத்துவமனை, தனியாா் மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க தொடா் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

SCROLL FOR NEXT