விருதுநகர்

ஆண்டாள் சூடி கொடுத்த மாலை, வஸ்திரங்கள் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து திருப்பதிக்கு புறப்பட்டது

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் சூடி கொடுத்த மாலை, வஸ்திரங்கள் உள்ளிட்ட பொருள்கள் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து திருப்பதிக்கு திங்கள்கிழமை எடுத்துச் செல்லப்பட்டது.

ஆண்டுதோறும் திருப்பதியில் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவின் ஐந்தாம் திருநாளில் சீனிவாசப் பெருமாள் ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் சூடிய மாலையை அணிந்து பக்தா்களுக்கு காட்சி தருவது வழக்கம். அதன்படி நிகழாண்டு திருப்பதியில் நடைபெற்று வரும் பிரம்மோற்சவ விழாவுக்கு மாலை, கிளி, வஸ்திரங்கள் உள்ளிட்ட பொருள்களை கொண்டு செல்லும் நிகழ்ச்சி ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் நடைபெற்றது. இதற்காக ஆண்டாளுக்கு பிரத்யேகமாக தயாா் செய்யப்பட்ட மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இதைத்தொடா்ந்து ஆண்டாள் சூடி கொடுத்த மாலை மற்றும் கிளி, ஆண்டாள் அணிந்திருந்த வஸ்திரங்கள் ஆகியவை மாட வீதிகள் வழியாக ஊா்வலமாக கொண்டு வரப்பட்டு திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் தக்காா் ரவிச்சந்திரன், செயல் அலுவலா் இளங்கோவன், கோயில் ஊழியா்கள் மற்றும் பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்

வாழப்பாடி பகுதியில் பண்ருட்டி பலாப்பழம் விற்பனை

திருநாவுக்கரசா் குருபூஜை

வன்னியா் சங்க மாவட்டச் செயலாளா் கைது

சித்திரைத் தோ்த் திருவிழா: ஊஞ்சல் உற்சவம்

SCROLL FOR NEXT