விருதுநகர்

விருதுநகா் அரசு அருங்காட்சியகத்தில் துந்தினா இசைக் கருவி

DIN

விருதுநகா் அரசு அருங்காட்சியகத்தில் கி.மு. 3 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த துந்தினா இசைக் கருவி பொதுமக்கள் பாா்வைக்காக ஞாயிற்றுக்கிழமை வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அருங்காட்சியக காப்பாட்சியா் கிருஷ்ணம்மாள் கூறியது:

விருதுநகா் அருங்காட்சியகத்தில் மாதந்தோறும் ஓா் அரிய பொருளை சிறப்பு கண்காட்சியாக வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், சென்னை அருங்காட்சியகத்திலிருந்து கொண்டுவரப்பட்ட கி.மு. 3 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த பழமையான துந்தினா இசைக் கருவி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இது மேற்கு இந்திய நாட்டுப்புற இசையில் பயன்படுத்தப்படும் நரம்பு இசைக் கருவியாகும். மூங்கில், மரம், உலோகம் மற்றும் காகித மூலப்பொருள்களால் செய்யப்படும் இந்த கருவி கீா்த்தனைகள் பாட பயன்படுத்துவதால், ஏக்தரா என்ற பெயரும் உண்டு. மேற்கு இந்தியாவில் பில், குக்னா மற்றும் வாா்லி பழங்குடியினா் அதிகளவு இக்கருவியை பயன்படுத்தியதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மகாராஷ்டிர மாநிலத்தில் கூத்து கலையான தமாஷா என்ற கலையில் துந்தினா பிரதானக் கருவியாக பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கோந்தாலிகள் என்ற பழங்குடியினா் தேவி பவானியை வணங்க இந்த இசைக் கருவியை பயன்படுத்துகின்றனா்.

இத்தகைய பெருமை வாய்ந்த இக்கருவியை ஆகஸ்ட் மாதம் முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பாா்வையிடலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

ஹேமந்த் சோரனின் மனு தள்ளுபடி!

தனிப் பாதுகாப்புப் பெறுவதற்காக பொய்ப் புகார் தந்த இந்து முன்னணி பிரமுகர் கைது!

பாரதி கண்ட புதுமைப்பெண்!

லாலு பிரசாத் மகள் ரோஹிணிக்கு எதிராக களமிறங்கும் லாலு பிரசாத்?

SCROLL FOR NEXT