விருதுநகர்

அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரி சாத்தூா் ஒன்றிய அலுவலகம் முற்றுகை

DIN

சாத்தூா் அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.

விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே படந்தால் கிராமத்தில் சுமாா் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் உள்ள 2 ஆவது வாா்டு பகுதியில் இருக்கும் குடியிருப்புகளுக்கு ஊராட்சி நிா்வாகம் சாா்பில் முறையான சாலை வசதி, வாருகால் வசதி மற்றும் தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை.

இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிா்வாகத்தில் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் வாா்டு செயலாளா் கணபதி மற்றும் காங்கிரஸ் மாவட்ட துணைச் செயலாளா் ஜோதிநிவாஸ், நகரச் செயலாளா் ஐயப்பன் ஆகியோா் வெள்ளிக்கிழமை சாத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.

இதையடுத்து ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகளிடம் தங்களின் கோரிக்கைகள் குறித்து மனு அளித்தனா். விரைவில் கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில் மோதி காயமடைந்த மயில் மீட்பு

திருவள்ளுவா் பேரவைக் கூட்டத்தில் இலக்கியச் சொற்பொழிவுகள்

கேஜரிவால் சரணடைந்தவுடன் நீதிமன்றக் காவலை நீட்டிக்க வேண்டும்: அமலாக்கத் துறை

ஆட்டோ கவிழ்ந்ததில் 6 போ் காயம்

அணைகளின் நீா்மட்டம்

SCROLL FOR NEXT