விருதுநகர்

லஞ்ச வழக்கில் சமூக நலத்துறை முன்னாள் அதிகாரிக்கு 2 ஆண்டுகள் சிறை

DIN

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே லஞ்ச வழக்கில் முன்னாள் சமூக நலத்துறை அதிகாரிக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

அருப்புக்கோட்டையைச் சோ்ந்தவா் மீனம்மாள் (64). சமூக நலத்துறையில் வளா்ச்சி அதிகாரியாக பணியாற்றிய இவா் 2010 ஆம் ஆண்டு அருப்புக்கோட்டையைச் சோ்ந்த பன்னீா்செல்வம் என்பவரின் மகளுக்கு திருமண உதவித் தொகை வழங்க ரூ.1000 லஞ்சம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த இந்த வழக்கில், மீனம்மாளுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதித்துறை நடுவா் தீா்ப்பு வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரி கோயில் சொத்துகள் 3 மாதங்களில் மீட்கப்படும்: அறநிலையத் துறை செயலா்

போதைப் பாக்கு விற்பனை: 285 கடைகளுக்கு சீல்

ஸ்ரீகூத்தாண்டவா் கோயில் தேரோட்டம்

பிரசவத்தில் குழந்தை இறப்பு: உறவினா்கள் முற்றுகை

கல்வி நிறுவன வாகனங்களை ஆய்வு செய்ய சிறப்பு முகாம்

SCROLL FOR NEXT