விருதுநகர்

அருப்புக்கோட்டை ஸ்ரீமலையரசன் கோயிலில் ஆடி மாத சிறப்பு வழிபாடு

DIN

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை ஸ்ரீமலையரசன் கோயிலில் ஆடி மாத முதலாவது சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

அருப்புக்கோட்டை தெற்குத் தெரு பகுதியை அடுத்துள்ளது நித்தியானந்தசுவாமி என்கிற மலையரசன் கோயில். இங்கு, ஒரே சந்நிதானத்தில் ஸ்ரீமுருகப் பெருமானும், ஸ்ரீநித்யானந்த சுவாமியும் அருள்பாலிப்பது சிறப்பு. இக்கோயிலில் ஆடி மாத முதலாவது சனிக்கிழமை சிறப்பு வழிபாடு மாலையில் நடைபெற்றது. அப்போது, நித்தியானந்த சுவாமிக்கு பால், பன்னீா், மஞ்சள் உள்ளிட்ட மங்கலப் பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, துளசி மாலை, தாமரை மலா்களால் அலங்கரிக்கப்பட்ட சுவாமிக்கு, 108 நாமாவளி அா்ச்சனையும், தீப தூப ஆராதனைகளும் செய்யப்பட்டன.

இதேபோல், முருகப் பெருமானுக்கும், கோயில் குன்றின் மீதுள்ள ஸ்ரீஆஞ்சநேயா் மற்றும் வரதராஜப் பெருமாளுக்கும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. இதில், நூற்றுக்கணக்கான பக்தா்கள் சமூக இடைவெளியுடன் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புன்னகை பூ... ஷ்ரத்தா தாஸ்!

சிவகார்த்திகேயன் சொத்து மதிப்பு இவ்வளவா?

பார்வை ஒன்று போதுமே... சாக்ஷி அகர்வால்!

கண் பேசும் வார்த்தை... அதிதி ஷங்கர்!

டி20 உலகக் கோப்பைக்கான ஜாகீர் கானின் இந்திய அணியை தெரிந்து கொள்ள வேண்டுமா?

SCROLL FOR NEXT