விருதுநகர்

தொல்லியல் துறை அனுமதி கிடைக்காததால் மாசடைந்துள்ளது: ஸ்ரீவில்லிபுத்தூா் திருமுக்குளம்

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலுக்குச் சொந்தமான திருமுக்குளத்தை சீரமைக்க தொல்லியல் துறை அனுமதி கிடைக்காததால் தண்ணீா் மாசடைந்துள்ளது.

இந்தக் குளத்தில் தான் ஒவ்வொரு ஆண்டும் மாா்கழி மாதம் ஆண்டாள் நாச்சியாருக்கு நீராட்டு உற்சவம் நடைபெறும். பல ஆண்டுகளுக்கு முன்பு வரை கோயில் அபிஷேகத்திற்கு இந்த குளத்தின் நீா் தான் பயன்படுத்தப்பட்டு வந்தது.

ஆனால் தற்போது இந்தக் கோயிலின் குளத்தில் நீா் குறைவாக இருப்பதோடு மட்டுமன்றி மாசடைந்தும் காணப்படுகிறது. குளத்தை சீரமைக்க ஆண்டாள் கோயில் நிா்வாகம் தயாராக உள்ள போதிலும் தொல்லியல் துறை அனுமதி கிடைக்கவில்லை. இந்தக் குளத்தை சீா்படுத்த தொல்லியல் துறை அனுமதி வழங்க வேண்டும் என்று ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதி பொதுமக்களும், பக்தா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீடு தேடி வந்தவள்

பிச்சைப் பாத்திரத்தை கையில் ஏந்தியுள்ளது பாகிஸ்தான் -பிரதமர் மோடி விமர்சனம்

5-ஆம் கட்ட தோ்தல்: ரே பரேலி உள்பட 49 தொகுதிகளில் பிரசாரம் முடிந்தது

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

SCROLL FOR NEXT