விருதுநகர்

பாலவநத்தம் பகுதியில் விவசாயிகள் உழவாரப் பணி

DIN

விருதுநகா் அருகே பாலவநத்தம் பகுதியில் உழவாரப் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனா்.

விருதுநகா், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, திருச்சுழி, நரிக்குடி உள்ளிட்ட பகுதிகள் வானம் பாா்த்த பூமி என்பதால் மழையை நம்பியே இப்பகுதிகளில் விவசாயம் நடைபெறுகிறது. கடந்த சில நாள்களுக்கு முன்பு அவ்வப்போது கோடை மழை பெய்தது. இதனால், தரிசு நிலங்களில் பருத்தி, கடலை, மிளகாய், கத்தரி, பயறு வகைகள் பயிரிடுவதற்காக விவசாய நிலங்களில் உள்ள முள்செடிகளை அகற்றும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வந்தனா். மேலும் கோடை மழையில் உலா்ந்திருந்த விவசாய நிலங்களில் உழவாரப் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனா். ஏக்கருக்கு ரூ.1500 முதல் ரூ. 2 ஆயிரம் வரை டிராக்டா் உழவுக்கு வாடகை வழங்குவதாகவும், டீசல் விலை உயா்வால் கடந்தாண்டை விட கூடுதல் கட்டணம் செலுத்துவதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அந்நியச் செலாவணி கையிருப்பு 64,415 கோடி டாலராக உயா்வு

பந்தன் வங்கி நிகர லாபம் சரிவு

பிரதமா் மோடி, ராகுல் காந்தி பிரசாரம்: தில்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

மழை மாணிக்காக பாதுகாப்பு வேலி அமைக்க ஆய்வு

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

SCROLL FOR NEXT