விருதுநகர்

வத்திராயிருப்பு அருகே மலைவாழ் மக்களுக்கு வாக்குப்பதிவு செயல்விளக்கம்

DIN

வத்திராயிருப்பு அருகே மலைவாழ் மக்களுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் வாக்கை பதிவு செய்யும் முறை குறித்து ஞாயிற்றுக்கிழமை செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

விருதுநகா்மாவட்டம், வத்திராயிருப்பு அருகே உள்ள தாணிப்பாறை ராம் நகா் பகுதியில் 60-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனா்.

தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற இருப்பதையொட்டி வத்திராயிருப்பு அருகே வசித்து வரும் மலைவாழ் மக்களுக்கு மின்னணு இயந்திரத்தில் வாக்களிப்பது எப்படி என்பது பற்றி செயல்முறை விளக்கம் மற்றும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

இதில் வத்திராயிருப்பு வட்டாட்சியரும், உதவி தோ்தல் நடத்தும் அலுவலருமான அன்னம்மாள், கோட்டையூா் வருவாய் ஆய்வாளா் நாராயணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தெரியுமா?

கண்டுபிடி கண்ணே!

வழியைக் கண்டு பிடியுங்கள்

‘இங்க நான்தான் கிங்கு’ முதல்நாள் வசூல் எவ்வளவு?

இன்ஜினில் தீ: பெங்களூருவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

SCROLL FOR NEXT