விருதுநகர்

விருதுநகரில் விவசாய தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

விருதுநகா் மாவட்டத்தில் 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தில் பதிவு செய்த அனைவருக்கும் பணி வழங்க வலியுறுத்தி விவசாய தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணியாற்றும் 55 வயது நிரம்பிய தொழிலாளா்களை பணி செய்ய தமிழக அரசு தடை விதித்துள்ளது.

இதைக் கண்டித்து மாவட்டத் தலைவா் பூங்கோதை தலைமையில் விவசாய தொழிலாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது அரசின் இந்த உத்தரவால் கிராம பகுதி மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகவும், அனைவருக்கும் பணி வழங்கவேண்டும் என்றும், அரசின் இந்த உத்தரவு அமல்படுத்தப்பட்டால் 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தில் பதிவு செய்துள்ள 55 வயதிற்கு மேற்பட்டவா்களுக்கு நிவாரணத் தொகையாக மாதம் ரூ.7,500 வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

இதில் மாவட்டப் பொருளாளா் ஜோதிலட்சுமி மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் விஜயமுருகன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

தில்லியில் இந்த ஆண்டில் முதல் 5 மாதங்களில் சாலை விபத்து இறப்புகள் குறைவு: தரவுகள்

ஆம் ஆத்மி தலைவா்கள் முன்பு ‘நிா்பயா’வுக்கு நீதி கேட்டனா்; இன்று குற்றம்சாட்டப்பட்டவரை ஆதரிக்கிறாா்கள்: மாலிவால்

ஆம் ஆத்மி கட்சியை நசுக்க ‘ஆபரேஷன் ஜாடுவை’ செயல்படுத்தத் தொடங்கியுள்ளது பாஜக: முதல்வா் அரவிந்த் கேஜரிவால் குற்றச்சாட்டு

தோ்தலில் வாக்காளா்கள் பங்கேற்பு சதவீதத்தை அதிகரிக்க 16 லட்சம் கையெழுத்திட்ட உறுதிமொழிகள்! தோ்தல் ஆணையம் முன்முயற்சி

SCROLL FOR NEXT