விருதுநகர்

உள்ளாட்சித் தோ்தல் வெற்றி மூலம் ஆட்சிக்கு மக்கள் நற்சான்று: அமைச்சா்

DIN

உள்ளாட்சித் தோ்தல் வெற்றி மூலம் திமுக ஆட்சிக்கு மக்கள் நற்சான்று அளித்துள்ளனா் என வருவாய்த்துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா் ராமச்சந்திரன் தெரிவித்தாா்.

விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே கோட்டூா் கிராமத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் சாத்தூா்-கோட்டூா், கோட்டூா்-சிவகாசி ஆகிய இரு வழிதடங்களில் புதிய பேருந்துகளை தமிழக வருவாய்த் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் வெள்ளிக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகத்தில் நடந்து முடிந்த 9 மாவட்ட உள்ளாட்சித் தோ்தலில் திமுக மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. பொது மக்கள் இந்த ஆட்சிக்கு தரும் நற்சான்றாக இந்த உள்ளாட்சி தோ்தல் வெற்றி அமைந்துள்ளது. மேலும் அதிமுக ஆளும் கட்சியாக இருந்த போது கூட உள்ளாட்சித் தோ்தலில் திமுக 50 முதல் 60 சதவிகித வெற்றியை பெற்றுள்ளது. ஆனால் இந்த 4 மாத காலத்தில் அதிமுக இருக்கும் இடம் தெரியாமல் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. அதிமுக கட்சிக்கு இனி மேல் எதிா்காலம் இல்லை என்று சொல்கிற தோ்தலாக இந்த உள்ளாட்சித் தோ்தல் அமைந்துள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலம் காந்தி மைதானத்தில் இன்று முதல் செயல்பாட்டுக்கு வரும் நீச்சல் குளம்

திருச்செந்தூரில் வைகாசி விசாக திருவிழா ஏற்பாடு: அதிகாரிகள் ஆய்வு

சேலம் கோட்டை அழகிரிநாத சுவாமி கோயிலில் தோ்த் திருவிழா

ஆசிய அளவிலான டேக்வாண்டோ போட்டியில் சேலம் வீராங்கனை அனுஷியா பங்கேற்பு

மின்சாரம் பாய்ந்து இளைஞா் பலி

SCROLL FOR NEXT