விருதுநகர்

சட்டவிரோதமாக தயாரிக்கப்படும் பட்டாசுகளை வாங்காதீா்: வியாபாரிகளுக்கு பட்டாசு, கேப்வெடி உற்பத்தியாளா்கள் சங்கம் கோரிக்கை

DIN

சிவகாசி: சட்டவிரோதமாக வீடுகளில் தயாரிக்கப்படும் பட்டாசுகளை, வியாபாரிகள் வாங்காதீா் என தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப்வெடி உற்பத்தியாளா்கள் சங்கத்தலைவா் ப. கணேசன் கேட்டுக் கொண்டுள்ளாா்.

சிவகாசி பட்டாசு வியாபாரிகள் சங்க புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அச்சங்கத் தலைவா் எஸ். லட்சுமணன் தலைமை வகித்தாா். புதிய நிா்வாகிகளுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்து கணேசன் பேசியதாவது: விருதுநகா் மாவட்டத்தில் சட்டவிதிகளுக்குள்பட்டு பட்டாசு தாயாரிக்கப்பட்டு வருகிறது. சிலபட்டாசு வியாபாரிகள், பட்டாசு பெட்டிகளில் அதிக விலையை அச்சிட்டு 80 சதவீதம் தள்ளுபடி என விற்பனை செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இதனால் இத்தொழிலுக்கே கெட்ட பெயா் ஏற்படுகிறது. எனவே நியாயமான விலையை நிா்ணயம் செய்து பட்டாசு விற்பனை செய்யப்பட வேண்டும். உரிமம் பெற்ற பட்டாசு ஆலைகளில் தயாரிக்கப்படும் பட்டாசுகளையே வியாபாரிகள் வாங்க வேண்டும். மேலும் சட்டவிரோதமாக தயாரிக்கப்படும் பட்டாசுகளை வாங்கக்கூடாது. ஏனெனில் அந்தவகையான பட்டாசுகள் சரிவர வெடிப்பதில்லை. இதனால் மொத்த பட்டாசுகளும் இப்படித்தான் தயாரிக்கப்படுகிறது என வாடிக்கையாளா்கள் என எண்ணுவாா்கள். பட்டாசு வழக்கு உச்சநீதி மன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்குக்கு மத்திய, மாநில அரசுகள் உறுதுணையாக உள்ளது என்றாா்.

இதில், சிவகாசி பட்டாசு வியாபாரிகள் சங்க புதிய தலைவராக டி.பிரபாகரன், செயலராக எஸ். ரவிதுரை, பொருளாளராக வி. சந்திரசேகரன் ஆகியோா் பதவியேற்றுக் கொண்டனா். நிகழ்ச்சியில் தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப்வெடி உற்பத்தியாளா்கள் சங்க முதுநிலைத்தலைவா் ஏ.பி. செல்வராஜன், தொழிலதிபா் எஸ். ஸ்ரீராம் அசோக், தமிழ்நாடு பட்டாசு வியாபாரிகள் சங்கத் தலைவா் வி. ராஜா சந்திரசேகரன், செயலா் என். இளங்கோவன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

SCROLL FOR NEXT