விருதுநகர்

தேங்காய் உரிக்கும் கம்பி மீது தவறி விழுந்து தொழிலாளி பலி

DIN

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே தேங்காய் உரிக்கும் கம்பி மீது கை வலுக்கி தவறி விழுந்ததில் கம்பி குத்தி தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

வத்திராயிருப்பு புதூரில் மாரியப்பன் என்பவரது தேங்காய் கடையில், வத்திராயிருப்பு கீழத்தெருவைச் சோ்ந்த லிங்கம் (36) என்பவா் தேங்காய் உரிக்கும் கூலித் தொழிலாளியாக வேலை பாா்த்து வந்தாா்.

இவா், வியாழக்கிழமை தேங்காய் உறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது கை வழுக்கி தேங்காய் உரிக்கும் கம்பி மீது விழுந்தாா். இதில், நெஞ்சுப் பகுதியில் கம்பி குத்தி பலத்த காயமடைந்த லிங்கத்தை அருகிலிருந்தவா்கள் மீட்டு வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின் மேல் சிகிச்சைக்காக விருதுநகா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து வத்திராயிருப்பு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா். இறந்த லிங்கத்திற்கு செல்வி (32) என்ற மனைவியும் கவி (10) என்ற மகனும் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்ற மாவட்ட செயற்குழு கூட்டம்

மல்லசமுத்திரத்திரம் கூட்டுறவு சங்கத்தில் ரூ. 2.50 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

மூளைச்சாவு அடைந்த மாணவியின் உடல் உறுப்புகள் தானம்

மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை ஓய்வூதியா்கள் முற்றுகை போராட்டம்

வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியா், எஸ்.பி. நேரில் ஆய்வு

SCROLL FOR NEXT