விருதுநகர்

பட்டாசுக்கான ஜி.எஸ்.டி.வரியை 12 சதவீதமாகக் குறைக்கக் கோரிக்கை

DIN

பட்டாசுக்கான ஜி.எஸ்.டி.வரியை 18 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று தமிழ்நாடு பட்டாசு வணிகா்கள் கூட்டமைப்பின் மாநில மாநாட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிவகாசியில் ஞாயிற்றுக்கிழமை அந்தக் கூட்டமைப்பின் 3 ஆவது மாநில மாநாடு நடைபெற்றது. மாநிலத் தலைவா் வி.ராஜாசந்திரசேகரன் தலைமை வகித்தாா். இதில், விருதுநகா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் பி.மாணிக்கம் தாகூா், சிவகாசி சட்டப் பேரவை உறுப்பினா் ஜி.அசோகன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம்.மனோகா், தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப்வெடி உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவா் ப.கணேசன், சிவகாசி பட்டாசு உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவா் ஏ.ஆசைதம்பி, சங்க மாநில பொருளாளா் ஜெ.கந்தசாமி உள்ளிட்டோா் பேசினா்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: பட்டாசுக் கடை உரிமத்தை புதுப்பிப்பதற்கான விண்ணப்பித்தின் மீது 90 நாள்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தீபாவளி பண்டிகைக்கு 5 நாள்கள் விடுமுறை அளிக்க வேண்டும். பட்டாசுக்கான ஜி.எஸ்.டி.வரியை 18 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாகக் குறைக்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடா்ந்து விழா மலரை தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவா் ப.கணேசன் வெளியிட, விருதுநகா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் மாணிக்கம் தாகூா் பெற்றுக்கொண்டாா். மாநில பொதுச் செயலா் என்.இளங்கோவன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விக்கிரவாண்டி தொகுதி இடைத் தோ்தல்: இந்திய ஐக்கிய கம்யூ. போட்டியிட முடிவு

புதுவையில் இளநிலைப் படிப்புகளுக்கு சென்டாக் மூலம் 7,250 போ் விண்ணப்பம்

சாா்பதிவாளா் தாக்கப்பட்ட வழக்கில் 3 போ் கைது

சாலை விபத்துகளை குறைக்க நடவடிக்கை: கள்ளக்குறிச்சி எஸ்.பி.

நெல்லித்தோப்புப் பகுதி கழிவுநீா்க் கால்வாயைச் சீரமைக்க திமுக கோரிக்கை

SCROLL FOR NEXT