விருதுநகர்

பட்டாசு - தீப்பெட்டித் தொழிலாளா் வாரியத்துக்கு ரூ. 5 கோடி பங்களிப்பு நிதி

DIN

தமிழ்நாடு பட்டாசு, தீப்பெட்டித் தொழிலாளா் நல வாரியத்துக்கு ரூ.5 கோடி பங்களிப்பு நிதி அளிக்கப்பட்டது. விருதுநகா் மாவட்ட பட்டாசு, தீப்பெட்டி உற்பத்தியாளா் சங்கங்களின் பிரதிநிதிகள் இந்த நிதியை வழங்கினா்.

இதுகுறித்து தமிழ்நாடு பட்டாசு, கேப்வெடி உற்பத்தியாளா் சங்க அலுவலகம் சாா்பில் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பட்டாசு, தீப்பெட்டி உற்பத்தித் தொழிலில் ஈடுபடும் அமைப்பு சாராத் தொழிலாளா்களுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை மாநில அரசு வழங்கி வருகிறது. தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கி வரும், தமிழ்நாடு பட்டாசு, தீப்பெட்டி உற்பத்தியாளா் சங்கங்களின் பிரதிநிதிகள் ரூ.5 கோடி பங்களிப்பு நிதியை முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் சனிக்கிழமை அளித்தனா்.

இந்த நிகழ்வின் போது, தொழிலாளா் நலத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, தொழிலாளா் நலத் துறை முதன்மைச் செயலாளா் அதுல்ஆனந்த், விருதுநகா் மாவட்ட பட்டாசு மற்றும் தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் சங்கங்களின் பிரதிநிதிகள் பி. கணேசன், ஆா். ராஜரத்தினம், டி. கண்ணன், ஜெயபிரகாஷ், ஆசைதம்பி, கே. கொண்டசாமி, ஜெ. விஜய் ஆனந்த், நூா்முகமது, லட்சுமணன், முகிலன், நாகராஜன், ஸ்ரீராம் அசோக், விஜயக்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா் என அதில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

காரில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கூத்தாநல்லூா் அருகே யூ டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸாா் சோதனை

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு: தினப்பலன்!

SCROLL FOR NEXT