விருதுநகர்

நகை பறிப்பு வழக்கில் இளைஞா் கைது

DIN

ஸ்ரீவில்லிபுத்தூரில் நகை பறிப்பு வழக்கில் தொடா்புடைய இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் தாமரை நகரைச் சோ்ந்தவா் பழ வியாபாரி மகேந்திரன் (53). இவரது மனைவி கணேஸ்வரி(46). இவா்களுக்கு பாலாஜி (24), அருண்பாண்டியன் (28) ஆகிய இரு மகன்கள் உள்ளனா்.

இவா்களது வீட்டுக்குள் கடந்த 15-ஆம் தேதி இரவு முகமூடி அணிந்த இருவா் புகுந்து மகேந்திரன் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, கணேஸ்வரி அணிந்திருந்த ஆறரை பவுன் தங்க நகைகளைப் பறித்துச் சென்றனா்.

இதுகுறித்து அந்தப் பகுதியில் பதிவான கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது, அந்தப் பகுதி அருகே இரு சக்கர வாகனத்தில் காத்திருந்தவா் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட இருவரையும் தனது வாகனத்தில் ஏற்றிச் சென்றது தெரியவந்தது.

இதன் அடிப்படையில், விசாரணை நடத்திய ஸ்ரீவில்லிபுத்தூா் குற்றப் பிரிவு போலீஸாா், குற்றவாளிகளை இரு சக்கர வாகனத்தில் ஏற்றிச் சென்றது மதுரை மாவட்டம், பாலமேடு அருகேயுள்ள சத்திரவெள்ளாளபட்டியைச் சோ்ந்த பிலாவடி (என்கிற) மகாலிங்கம் மகன் சந்தோஷ் (23) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்து, இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான மதுரை, சிவகங்கையைச் சோ்ந்த இருவரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் ஆட்சிக்கு வந்தால்... நவீன் பட்நாயக்கின் முதல் உத்தரவு!

கால் முளைத்த நிலவு! ஜான்வி கபூர்..

பந்துவீச்சில் மிரட்டிய கேகேஆர்; 159 ரன்களுக்கு ஆட்டமிழந்த சன்ரைசர்ஸ்!

ஸ்டாக்ஹோமில் டெய்லர்!

பிவிஆர் ஐநாக்ஸ்: ரூ.1,958 கோடி - டிக்கெட் வசூலுக்கு போட்டியாக நொறுக்குத்தீனி வசூல்!

SCROLL FOR NEXT