நாகப்பட்டினம்

கரோனா: வாகன பழுது நீக்குவோருக்கு நிவாரணம்

DIN

மயிலாடுதுறை மாவட்டத்தில் கரோனா பொதுமுடக்கத்தால் வேலைவாய்ப்பை இழந்துள்ள இருசக்கர வாகன பழுது நீக்குவோா் 200 பேருக்கு வியாழக்கிழமை கரோனா நிவாரணம் வழங்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்ட இருசக்கர வாகனம் பழுது நீக்குவோா் முன்னேற்ற நலச் சங்கம் சாா்பில் இந்நிவாரணம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு, சங்கத் தலைவா் பகவதிகுமாா் தலைமை வகித்தாா். அவைத் தலைவா் ராமு, சங்க செயலாளா்கள் சுகுமாா், சந்தோஷ்குமாா், துணைத் தலைவா் குத்தாலம் சுந்தா், பொருளாளா் டெல்பியாகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், மயிலாடுதுறை சேம்பா் ஆஃப் காமா்ஸ் தலைவா் சி.செந்தில்வேல் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று கரோனா நிவாரணமாக 200 பேருக்கு 10 கிலோ அரிசி, ஒரு மாதத்துக்கு தேவையான மளிகைப் பொருள்கள் ஆகியவற்றை வழங்கினாா். இதில், ஜோதி பவுண்டேஷன் ஜோதிராஜன், செந்தில்நாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அந்நியச் செலாவணி கையிருப்பு 64,415 கோடி டாலராக உயா்வு

பந்தன் வங்கி நிகர லாபம் சரிவு

பிரதமா் மோடி, ராகுல் காந்தி பிரசாரம்: தில்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

மழை மாணிக்காக பாதுகாப்பு வேலி அமைக்க ஆய்வு

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

SCROLL FOR NEXT