காரைக்கால்

புதுச்சேரி முன்னாள் முதல்வர் ராமசாமி உடல் அரசு மரியாதையுடன் தகனம்

DIN

புதுச்சேரியில் திங்கள்கிழமை காலமான முன்னாள் முதல்வர் எஸ்.ராமசாமி உடல் காரைக்காலில் புதன்கிழமை முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
புதுச்சேரி முன்னாள் முதல்வர் எஸ்.ராமசாமி, புதுச்சேரியில் உள்ள வாணரப்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் திங்கள்கிழமை காலமானார். இவரது உடல் திங்கள்கிழமை இரவு சொந்த ஊரான காரைக்கால் வீராசாமி நாயக்கர் வீதியில் உள்ள இல்லத்துக்கு கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.  காரைக்கால் அரசுத் துறை அதிகாரிகள், பல்வேறு அரசியல் கட்சிப் பிரமுகர்கள், பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை அஞ்சலி செலுத்தினர்.
 முழு அரசு மரியாதையுடன் தகனம்: புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஏ.யு.அசனா,  மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் வி.ஜே.சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஏ.எம்.எச்.நாஜிம், அ.மாரிமுத்து, ஏ.வி.சுப்பிரமணியன் ஆகியோர் புதன்கிழமை அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதைத் தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஊர்வலமாக காரைக்கால் பச்சூர் சுடுகாட்டுக்கு உடல் கொண்டுசெல்லப்பட்டது. அங்கு 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. ராமசாமியின் இளைய மகன் ராஜா சிதைக்கு தீ மூட்டினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT