காரைக்கால்

கோமாரி நோய்த் தடுப்பூசி போடும் பணி நாளை தொடக்கம்

DIN

காரைக்கால் பகுதிகளிலுள்ள கால்நடைகளுக்கு மார்ச் 15-ஆம் தேதி முதல் கோமாரி நோய்த் தடுப்பூசி போடும் பணி தொடங்குகிறது என கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறை இணை இயக்குநர் லதா மங்கேஷ்கர் தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேசிய கோமாரி நோய்த் தடுப்புத் திட்டம் புதுச்சேரி மாநிலம், காரைக்காலில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் 14-ஆவது சுற்றாக கால்நடை மருத்துவர்கள் மார்ச் 15-ஆம் தேதி முதல் வீடு வீடாகச் சென்று கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி போடவுள்ளனர். மார்ச் 15 முதல் 17 வரை காரைக்கால், நெடுங்காடு கொம்யூன்களிலும்,  மார்ச் 19 முதல் 21 வரை நிரவி, தென்னங்குடி பகுதிகளிலும், மார்ச் 22 முதல் 24 வரை திருப்பட்டினம் மற்றும் கோட்டுச்சேரி கொம்யூன்களில் காலை 6 முதல் 10 மணி வரை மருத்துவக் குழுவினர் நேரில் வந்து தடுப்பூசி போடுவர். எனவே, கால்நடை வளர்ப்பவர்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு தங்களது கால்நடைகளை கோமாரி நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

SCROLL FOR NEXT