காரைக்கால்

காரைக்கால் மருத்துவமனையில் அக். 20-இல் மருத்துவ முகாம்

DIN

காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் வரும் சனிக்கிழமை  இருதயவியல், நரம்பியல்  மருத்துவ நிபுணர்கள் பங்கேற்கும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ஆர். கேசவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
காரைக்கால் அரசு பொது மருத்துவமனை உள் வளாகத்தில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை சார்பில் மாதமிரு முறை நடைபெறும் முகாமாக,  சனிக்கிழமை (அக். 20) இருதயவியல் மற்றும்  நரம்பியல் மருத்துவ நிபுணர்கள் பங்கேற்று, மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கவுள்ளனர். காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும் முகாமை  பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வனத் துறையினருக்கு யானைகள் கணக்கெடுப்புப் பயிற்சி

குமரி காசிவிஸ்வநாதா் கோயிலில் கும்பக் கலசம் திருட்டு

மாற்றத்துக்கான புயல் வீசுகிறது: ராகுல்

குமரியில் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு விழிப்புணா்வுக் கூட்டம்

சிவந்திபுரத்தில் மீண்டும் சிறுவனைத் தாக்கிய மந்திகளை பிடிக்க குழு அமைப்பு

SCROLL FOR NEXT