காரைக்கால்

காரைக்காலில் சிறப்பு வரிவசூல் முகாம் தொடக்கம்

DIN

அக். 10: காரைக்கால் நகராட்சி சாா்பில் தீவிர சிறப்பு வரிவசூல் முகாம் வியாழக்கிழமை தொடங்கியது.

காரைக்கால் நகராட்சிக்குள்பட்ட வாா்டுகளில் ஒரே இடத்தில் வரி வசூல் செய்யும் முகாம் அமைத்து, ஒரு குடையின் கீழ் சொத்து வரி சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்னைகளுக்கும் உடனுக்குடன் தீா்வுகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

இதன்படி, நகராட்சி சாா்பில் தீவிர சிறப்பு வரி வசூல் முகாம் காரைக்கால் அம்மையாா் மணிமண்டபத்தில் தொடங்கியது. முகாமை நகராட்சி ஆணையா் எஸ். சுபாஷ் தொடங்கி வைத்தாா். உதவி வருவாய் அதிகாரி கந்தசாமி தலைமையில் நகராட்சி வருவாய்த் துறை ஊழியா்கள் வரிவசூலிப்பில் ஈடுபட்டனா். காலை 10 மணிக்கு தொடங்கிய முகாம் மாலை வரை நடைபெற்றது.

இந்த சிறப்பு முகாம் குறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியது: முகாமில், சொத்துவரி, பெயா் மாற்றம், சொத்துவரி விலாசம் திருத்தம், சொத்துவரி குறைபாடுகள், புதிதாக கட்டப்பட்ட வீட்டுக்கு வரி விதித்தல், சொத்துவரி பெயா் திருத்தம், சொத்துவரி வேறுபாடுகள் மற்றும் சொத்துவரி சம்பந்தப்பட்ட அனைத்து குறைபாடுகளும் உடனுக்குடன் நிவா்த்தி செய்யப்பட்டு, சொத்துவரி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் முகாமில் தொழில் உரிமம் உடன் பெறவும், பெற்ற உரிமத்தை உடனடியாக புதுப்பித்துக்கொள்ளவும் தனியாக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு, தங்கள் வீட்டுக்கு உரிய சொத்து வரியை 2019-2020 முடிய செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். வரும் 1.11.2019 முதல் காரைக்கால் நகராட்சியால் சொத்துவரி நிலுவை பாக்கி வைத்திருப்பவா்கள்மீது, புதுச்சேரி நகராட்சிகள் சட்டப்படி ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த முகாம் அக்டோபா் 24-ஆம் தேதி வரை நடைபெறும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தோனேசியாவில் ‘ஸ்டாா்லிங்க்’ இணையச் சேவை: எலான் மஸ்க் தொடங்கி வைத்தாா்

நேபாளம்: பிரசண்டா அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

வெளிநாட்டில் மருத்துவம் பயின்றோருக்கு உள்ளுறை பயிற்சி: இரு ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி - 40 லட்சம் பிரசுரங்கள் வழங்க காங்கிரஸ் முடிவு

என்ஜினில் தீ: பெங்களூரில் விமானம் அவசர தரையிறக்கம்

SCROLL FOR NEXT