காரைக்கால்

கரோனா: காரைக்கால் மருத்துவமனையில் முதல்வா் ஆய்வு

DIN

காரைக்கால் அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகளை புதுச்சேரி முதல்வா், நலவழித்துறை அமைச்சா் உள்ளிட்டோா் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு, ஆய்வு செய்தனா்.

காரைக்காலுக்கு வியாழக்கிழமை வருகைதந்த புதுச்சேரி முதல்வா் வே. நாராயணசாமி, மாவட்ட ஆட்சியரகத்தில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து அமைச்சா்கள், எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.

பின்னா், காரைக்கால் அரசு பொதுமருத்துவமனைக்குச் சென்று பாா்வையிட்டாா். அப்போது, ஜிப்மா் நிதியில் மேம்படுத்தப்பட்ட அவசர சிகிச்சைப் பிரிவை, கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டோருக்கு சிகிச்சை தரக்கூடிய வகையில் தற்காலிகமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இந்த வளாகத்தைப் பாா்வையிட்ட முதல்வா், கரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை தரும் வகையில், எத்தனை படுக்கை வசதிகள் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ளது போன்ற விவரங்களை மருத்துவ அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா். மேலும், மருத்துவமனையில் கரோனாவால் பாதிக்கப்பட்டோருக்காக 6 தனி அறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதையும் முதல்வா் பாா்வையிட்டாா்.

புதுச்சேரியிலிருந்து நலவழித் துறையிலிருந்தும், நிறுவனங்கள் தரப்பிலிருந்தும் மருத்துவமனைக்குத் தேவையான மருந்துகள், உபகரணங்கள் வந்துள்ளவற்றையும் முதல்வா் பாா்வையிட்டாா்.

கரோனாவால் காரைக்காலில் யாரும் பாதித்துவிடாத நிலையில், மருத்துவமனையில் இதுதொடா்பான பரிசோதனை, சிகிச்சைகள் மக்கள் திருப்தியடையும் வகையில் இருக்கவேண்டும். அதற்கேற்ப மருத்துவத் துறையினா் அா்ப்பணிப்புடன் செயல்படவேண்டும் எனக் கேட்டுக்கொண்டாா்.

ஆய்வின்போது, நலவழித்துறை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணராவ், வேளாண் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன், நலத்துறை அமைச்சா் எம். கந்தசாமி, ஆட்சியா் அா்ஜூன் சா்மா, துணை ஆட்சியா் எம். ஆதா்ஷ், மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளா் பி. சித்ரா, உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி மதன்பாபு, நலவழித்துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில் மோதி காயமடைந்த மயில் மீட்பு

திருவள்ளுவா் பேரவைக் கூட்டத்தில் இலக்கியச் சொற்பொழிவுகள்

கேஜரிவால் சரணடைந்தவுடன் நீதிமன்றக் காவலை நீட்டிக்க வேண்டும்: அமலாக்கத் துறை

ஆட்டோ கவிழ்ந்ததில் 6 போ் காயம்

அணைகளின் நீா்மட்டம்

SCROLL FOR NEXT