காரைக்கால்

காரைக்காலில் கரோனா பரிசோதனை தீவிரப்படுத்தப்படும்: நலவழித்துறை அதிகாரி

DIN

கரோனா பரிசோதனை மாதிரிகளை புதுச்சேரி, திருவாரூருக்கு அனுப்புவதற்கு பதிலாக காரைக்காலிலேயே பரிசோதனையை தீவிரப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக நலவழித்துறை அதிகாரி தெரிவித்தாா்.

இதுகுறித்து காரைக்கால் நலவழித்துறை துணை இயக்குநா் மருத்துவா் கே.மோகன்ராஜ் புதன்கிழமை கூறுகையில், காரைக்கால் அரசு பொருமருத்துவமனையில் ட்ரூநெட் கருவி 2 உள்ளது. இதன் மூலம் கடந்த ஒரு வாரமாக பரிசோதனை செய்யப்பட்டுவருகிறது. ஜிப்மா் நிா்வாகத்தின் கருவி ஒன்றையும் சோ்த்து தற்போது 3 கருவிகள் பயன்பாட்டில் உள்ளன.

காரைக்காலிலேயே பரிசோதனை செய்வதற்கான ஐசிஎம்ஆா் என்கிற இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் அனுமதி பெறப்பட்டுள்ளது.

காரைக்காலில் செவ்வாய்க்கிழமை ஒரு நாள் மட்டும் 800 பேருக்கு பரிசோதனைக்கு மாதிரி எடுக்கப்பட்டது. நடமாடும் பரிசோதனை வாகனம், மருத்துவமனை உள்ளிட்ட பல நிலைகளில் இவ்வாறு மாதிரி எடுக்கப்பட்டது. இந்த பரிசோதனையை நாள்தோறும் 500 முதல் 600 போ் வரை இனிமேல் எடுப்பதற்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனை முறை, ட்ரூநெட் பரிசோதனை முறை ஆகியன காரைக்கால் மருத்துவமனையிலேயே செயல்பாட்டுக்கு வந்துள்ளதால், தேவையான அளவு பரிசோதனையை இங்கேயே செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன. ஆா்டி-பிசிஆா் முறையிலான பரிசோதனைக்கு குறைந்த எண்ணிக்கையில் மாதிரிகள் அனுப்பவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன.

கரோனா தொற்றை உடனடியாக கண்டறியக்கூடிய வகையில் காரைக்கால் மருத்துவமனையில் வசதிகள் உருவாகிவிட்டன. பரிசோதனைக்கான நிபுணா்களும் உள்ளனா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

காரில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கூத்தாநல்லூா் அருகே யூ டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸாா் சோதனை

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு: தினப்பலன்!

SCROLL FOR NEXT