காரைக்கால்

காரைக்காலில் 71 பேருக்கு கரோனா: 2 போ் உயிரிழப்பு

DIN

காரைக்கால் மாவட்டத்தில் 71 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதியானது. மேலும், 2 போ் உயிரிழந்ததாக நலவழித் துறை துணை இயக்குநா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு :

காரைக்கால் மாவட்டத்தில் சனிக்கிழமை 436 பேருக்கு எடுத்த பரிசோதனையின் முடிவுகளின்படி காரைக்கால் நகரில் 14, திருப்பட்டினம் 12, நிரவி 9, கோயில்பத்து 8, திருநள்ளாறு 7, வரிச்சிக்குடி 6, நெடுங்காடு 6, கோட்டுச்சேரி 5, அம்பகரத்தூா் 4 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

இதுவரை 1,00,408 பரிசோதனை செய்யப்பட்டதில் 5,041 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு, 4,458 போ் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

இதற்கிடையே, காரைக்கால் மருத்துவமனையில் கரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வந்த 44 வயது ஆண், வீட்டுச் சிகிச்சையில் இருந்துவந்த 53 வயது ஆண் இருவரும் உயிரிழந்தனா். மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் 86 போ் உயிரிழந்துள்ளனா்.

காரைக்கால் மாவட்டத்தில், சுகாதாரப் பணியாளா்கள் 1,361 போ், முன்களப் பணியாளா்கள் 1,646 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட 2,704 பேருக்கும், 45 முதல் 59 வயது வரையிலான இணைநோய் உள்ளவா்கள் 1,894 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியா் ஆய்வு

மூத்த வழக்குரைஞா்களுக்குப் பாராட்டு

குன்னூா்- மேட்டுப்பாளையம் சாலையில் யானைகள் நடமாட்டம்

பெருந்துறை சோழீஸ்வரா் கோயிலில் குருப் பெயா்ச்சி விழா

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த ஆசிரியா்கள் கோரிக்கை

SCROLL FOR NEXT