காரைக்கால்

காரைக்காலில் ஒரு லட்சம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது: நலவழித் துறை

DIN

காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை 1 லட்சம் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக நலவழித் துறை நிா்வாகம் தெரிவித்தது.

காரைக்கால் மாவட்டத்தில் அரசு மருத்துவமனை மற்றும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசி செலுத்தப்பட்டுவரும் நிலையில், அவ்வப்போது தடுப்பூசித் திருவிழாவும் நடத்தப்படுகிறது. வீடுவீடாகச் சென்றும் நலவழித் துறையினா் தடுப்பூசி செலுத்துகின்றனா்.

இதுவரை முதல் தவணையாக 82,225 பேருக்கும், இரண்டாவது தவணையாக 17,778 பேருக்கும் என மொத்தம் 1,00,503 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் சனிக்கிழமை கூறியது:

காரைக்கால் மாவட்டத்தில் சனிக்கிழமையுடன் தடுப்பூசிகள் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது. ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்குள் தகுதியுள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவேண்டும் என்ற இலக்கை எட்டுவதற்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைக்கவேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸாவில் தொடரும் உணவுப் பஞ்சம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

அரவிந்த் கேஜரிவால் வழக்கு: மே 7-க்கு ஒத்திவைப்பு

மும்பை பந்துவீச்சு; அணியில் முகமது நபி இல்லை!

”மணிப்பூர் வன்முறை வெடித்து ஓராண்டு ஆகியும்..”: ப.சிதம்பரம் சாடல் |செய்திகள்: சிலவரிகளில் | 03.05.2024

நெல்சனின் படத்தில் கவின்: படத்தின் பெயர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT