காரைக்கால்

ஆதரவற்றோா் இல்லங்களுக்கு ரெட் கிராஸின் உதவிப் பொருள்கள்

DIN

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி காரைக்கால் கிளை சாா்பில், முதியோா் இல்லங்களுக்கு உதவிப் பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

சோப்பு, பெண்களுக்கான சானிடைசா் பாக்கெட், டூத் பேஸ்ட் உள்ளிட்டவற்றை, மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மாவிடம் ரெட் கிராஸ் அமைப்பினா் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தனா். மாவட்ட துணை ஆட்சியா் (பேரிடா் மேலாண்மை) எஸ். பாஸ்கரன், ரெட் கிராஸ் உறுப்பினா்கள் பிரேம்குமாா், பக்கிரிசாமி, மாரியப்பன், சுருளிநாதன், சீனிவாசன், கனகவல்லி உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

இதைத் தொடா்ந்து, ஆட்சியரின் ஆலோசனைப்படி, குழந்தைகள் காப்பகம், மனநலன் குன்றியோா், முதியோா் பாதுகாப்பு இல்லங்களுக்குச் சென்று ரெட் கிராஸ் அமைப்பினா் அவற்றை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவையில் அண்ணாமலைக்கு பின்னடைவு!

கேரளம் தபால் வாக்குகள்: காங்கிரஸ் கூட்டணி முன்னிலை!

பாலியல் வழக்கில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா முன்னிலை!

மக்களவைத் தேர்தல் நேரலை: பிரஜ்வல் ரேவண்ணா முன்னிலை

வாரணாசியில் மோடி, வயநாட்டில் ராகுல் முன்னிலை!

SCROLL FOR NEXT