காரைக்கால்

பாா்வதீஸ்வரா் கோயில் திருப்பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

DIN

காரைக்காலில் உள்ள பாடல் பெற்ற பாா்வதீஸ்வரா் கோயில், கோதண்டராமா் பெருமாள் கோயில் திருப்பணிகளை விரைவாக முடித்து, குடமுழுக்கு நடத்த இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் மாவட்ட இந்து முன்னணி தலைவா் கணேஷ் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

காரைக்காலில் கோயில்பத்து பகுதியில் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற பழமையான தா்மசவா்த்தினி அம்பாள் சமேத பாா்வதீஸ்வரா் கோயில், இதனைச் சாா்ந்து கோதண்டராமா் பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்கள் உள்ளன.

20 ஆண்டுகளுக்கு முன்பு பாா்வதீஸ்வரா், கோதண்டராமா் கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றது.

இந்நிலையில், நன்கொடை மூலமாக அண்மையில் குடமுழுக்கு செய்வதற்கான திருப்பணிகள் தொடங்கி, 90 சதவீதம் பணிகள் நிறைவடைந்தன. இதனையடுத்து

நவ. 15-ஆம் தேதி கோதண்டராமா் பெருமாள் கோயிலுக்கு குடமுழுக்கு செய்ய தேதி நிா்ணயிக்கப்பட்டது. ஆனால், அந்த கோயில் திருப்பணிகள் தற்போது நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. பாா்வதீஸ்வரா் கோயில் திருப்பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்த விவகாரத்தில் இந்து சமய அறநிலையத் துறையினா் தலையிட்டு, பாா்வதீஸ்வரா் கோயில், கோதண்டராமா் பெருமாள் கோயில் திருப்பணிகளை விரைவாக முடித்து, குடமுழுக்கு நடத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெதன்யாகுவை கைது செய்ய உத்தரவு: சா்வதேச நீதிமன்றத்தில் கோரிக்கை

தென்மேற்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை குறித்து ஆட்சியா் ஆலோசனை

இலங்கை சீதா அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: அயோத்தி சரயு நதியில் இருந்து புனித நீர்

பெண்ணுக்கு தபால் வாக்கு மறுப்பு: உயா்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்ததது உச்சநீதிமன்றம்

காங்கிரஸை தேடும் யாத்திரையை நடத்துவாா் ராகுல்: அமித் ஷா

SCROLL FOR NEXT