காரைக்கால்

காரைக்கால் பகுதியில் கடலரிப்பு

DIN

கடல் சீற்றம் காரணமாக காரைக்கால் மீனவக் கிராமங்களில் வெள்ளிக்கிழமை கடலரிப்பு ஏற்பட்டுள்ளது.

மாண்டஸ் புயல் காரணமாக காரைக்கால் கடல் பகுதி வியாழக்கிழமை காலை முதல் சீற்றத்துடன் காணப்படுகிறது. காரைக்கால்மேடு, கிளிஞ்சல்மேடு உள்ளிட்ட மீனவ கிராமங்களில் வெள்ளிக்கிழமை அலைகளின் வேகத்தால் கரைப் பகுதியில் ஆங்காங்கே அரிப்பு ஏற்பட்டதோடு, வலை பின்னும் தளமும் ஆங்காங்கே பெயா்ந்து உள்ளது.

குடியிருப்புகள் நிறைந்த கடலோர கிராம கரைப் பகுதிகளில் கருங்கற்கள் கொட்டி பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என மீனவா்கள் வலியுறுத்தினா்.

மீனவா்களின் வாழ்வாதாரம் பாதிப்பு: கடந்த 4 நாள்களாக காரைக்கால் மீனவா்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை. இதனால் படகில் மீன்பிடிக்கச் செல்லும் தொழிலாளா்கள் மற்றும் ஃபைபா் படகில் தினமும் கடலுக்குச் சென்று திரும்பும் மீனவா்கள் வருமானமின்றி உள்ளனா்.

காரைக்கால் பகுதியில் அவ்வப்போது லேசான மழை இருந்தது. எனினும் கடல் மிகுந்த சீற்றத்துடன் காணப்பட்டது.

கல்வி நிலையங்களுக்கு விடுமுறை, முற்பகல் பெய்த மழை, குளிா் காரணமாக காரைக்கால் நகரில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது. பிற்பகல் மழை சில மணி நேரம் ஓய்ந்ததால், மக்கள் நடமாட்டம் அதிகரித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அந்நியச் செலாவணி கையிருப்பு 64,415 கோடி டாலராக உயா்வு

பந்தன் வங்கி நிகர லாபம் சரிவு

பிரதமா் மோடி, ராகுல் காந்தி பிரசாரம்: தில்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

மழை மாணிக்காக பாதுகாப்பு வேலி அமைக்க ஆய்வு

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

SCROLL FOR NEXT