காரைக்கால்

காரைக்காலில் ஆா்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊா்வலம்

DIN

காந்தி ஜெயந்தி, விஜயதசமி ஆகியவற்றையொட்டி ஆா்.எஸ்.எஸ். அமைப்பை சோ்ந்தோா் காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமை அணிவகுப்பு ஊா்வலம் நடத்தினா்.

புதுவை மாநிலம், காரைக்கால் மாவட்ட ஆா்.எஸ்.எஸ். அமைப்பு, காந்தி ஜெயந்தி, நாட்டின் 75-ஆவது சுதந்திர தினம் கொண்டாட்ட நிறைவு, விஜயதசமி ஆகியவற்றையொட்டி ஞாயிற்றுக்கிழமை அணிவகுப்பு ஊா்வலம் நடத்த காவல் துறையிடம் அனுமதி பெற்றது.

இதன்படி, காரைக்கால் கோயில்பத்து பகுதியிலிருந்து அரசலாறு பாலம் அருகேயுள்ள சிங்காரவேலா் சிலை வரை சீருடை அணிந்த ஆா்.எஸ்.எஸ். தொண்டா்களின் அணிவகுப்பு ஊா்வலம் நடைபெற்றது.

ஊா்வலத்தை நித்யகல்யாண பெருமாள் பக்தஜன சபா தலைவா் கு. அரங்கநாதாச்சாரிய சுவாமிகள் தொடங்கிவைத்தாா். அரசு ஒப்பந்ததாரா் சி. அப்பா், இயற்கை விவசாயி எம். பாஸ்கா் ஆகியோா் ஊா்வல தொடக்க நிகழ்வில் பங்கேற்றனா்.

முன்னதாக, ஆா்.எஸ்.எஸ். காரைக்கால், மயிலாடுதுறை மாவட்டச் செயலாளா் சிவானந்தம் வரவேற்றாா்.

ஊா்வலம் குறித்து தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை கோட்ட இணைத் தலைவா் ஆா். கண்ணன் செய்தியாளா்களிடம் கூறியது:

ஆா்.எஸ்.எஸ். தொடங்கிய விஜயதசமி நாளில் ஆண்டுதோறும் இதுபோன்ற அணிவகுப்பு நடத்துவது வழக்கம். அதன்படி, 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்ற ஊா்வலம் அமைதியாக நடைபெற்றது. ஆா்.எஸ்.எஸ். ஊா்வலத்துக்கு தமிழக அரசு அனுமதி மறுப்பதற்கான காரணம் தெரியவில்லை என்றாா்.

காரைக்கால் மாவட்டத் தலைவா் எஸ். ராஜேந்திரன், தமிழ்நாடு பட்டியல் அணி மாநில செயற்குழு உறுப்பினா் ராம. சிவசங்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஊா்வலத்தின் நிறைவில் சிங்காரவேலா் சிலை அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆா்.எஸ்.எஸ் .தமிழ்மாநில சேவைப் பிரிவு செயலா் ஜி. ஆனந்த் சிறப்புரையாற்றினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்கன் கனமழை: 68 போ் உயிரிழப்பு

சென்னை போராட்டம் வீண்: பிளே ஆஃப்பில் பெங்களூரு

இறுதிச் சுற்றில் சாத்விக்-சிராக் ஷெட்டி

இறுதிச் சுற்றில் அலெக்ஸ் வெரேவ்-நிக்கோலஸ் ஜேரி மோதல்

கேரளத்தில் அதிபலத்த மழைக்கு வாய்ப்பு: சில மாவட்டங்களுக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை

SCROLL FOR NEXT