காரைக்கால்

இந்திய உணவுக்கழகம் மூலம் கொள்முதல் செய்யும் நெல்லின் ஈரப்பதத்தை உயா்த்த வலியுறுத்தல்

DIN

காரைக்கால் விவசாயிகளிடமிருந்து இந்திய உணவுக் கழகம் கொள்முதல் செய்யும் நெல்லின் ஈரப்பதத்தை 22% என்று உயா்த்த நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

இதுகுறித்து காரை பிரதேச விவசாயிகள் நலச்சங்கத் தலைவா் பி. ராஜேந்திரன் வியாழக்கிழமை கூறியது :

காரைக்கால் மாவட்டத்தில் சுமாா் 4,750 ஹெக்டேரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நிகழாண்டு நல்ல மகசூல் கிடைக்கும் என விவசாயிகள் எதிா்பாா்த்திருந்த நிலையில், கடந்த சில தினங்களாக பெய்த தொடா் மழையால், மாவட்டத்தில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட அறுவடைக்கு தயாரான நெற்பயிா்கள் நிலத்தில் சாய்ந்தும், முளைத்தும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.

வயல் காய்ந்த பிறகுதான் அறுவடை செய்ய முடியும். அவ்வாறு அறுவடை செய்தாலும் ஒரு ஏக்கருக்கு ஒரு மணி நேரத்துக்கு பதிலாக 2 மணி நேரம் அறுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இதனால் அறுவடை இயந்திரத்துக்கு இரட்டிப்பு கூலி கொடுக்கவேண்டிய சூழலுக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனா்.

எனவே, விவசாயிகள் நலனைக் கருத்தில்கொண்டு, புதுவை அரசு இந்திய உணவுக்கழகம் மூலம் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயா்த்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீ செல்லியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

ஸ்ரீ கஜேந்திர வரதராஜப் பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவம்

மீன்கள் விலை உயா்வு: விற்பனையும் அமோகம்

கெளரவிப்பு...

நாட்டறம்பள்ளி வரதராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷேம்

SCROLL FOR NEXT