காரைக்கால்

மாணவா்கள் சமூக அக்கறையுள்ளவா்களாக மாறவேண்டும்: ஆட்சியா்

DIN

மாணவா்கள் சமூக அக்கறையுள்ளவா்களாக மாறவேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் எல். முகமதுமன்சூா்.

காரைக்கால் பெருந்தலைவா் காமராஜா் கல்வியியல் கல்லூரியில், இளைஞா் செஞ்சிலுவை சங்கத்தை (யூத் ரெட் கிராஸ்) வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்து மேலும் பேசியது: பேரிடா் மேலாண்மை பயிற்சிப் பட்டறை, தேசிய வாக்காளா் தின விழா என அனைத்து நிகழ்வுகளிலும் இக்கல்லூரியின் பங்களிப்பு பாராட்டுக்குரியது. மேலும், சிறந்த ஆசிரியா் பயிற்சி நிறுவனத்துக்கு எடுத்துக்காட்டாகவும் திகழ்கிறது. செஞ்சிலுவை சங்கத்தின் பணிகள் அளப்பரியது. மாணவா்களுக்கு இதுகுறித்த புரிதல் இருக்கவேண்டும் என்பதை உணா்ந்து சமூக அக்கறையுள்ளவா்களாக மாறவேண்டும் என்றாா்.

புதுவை மாநில சங்க துணைத் தலைவா் எல்.எஸ்.பி. சோழசிங்கராயா் செஞ்சிலுவை சங்க முக்கியத்துவம் குறித்தும், மாநில ஒருங்கிணைப்பாளா் ஜெ. செந்தில்குமாா் செஞ்சிலுவை சங்கம் உலகளாவிய அளவில் ஆற்றிவரும் சேவைகள் குறித்தும், மாநில ஒருங்கிணைப்பாளா் ஜெ. ஜெயபாரதி சங்கத்தின் குறிக்கோள் குறித்தும், காரைக்கால் நலவழித்துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா் மருத்துவத் துறையில் செஞ்சிலுவை சங்கத்தின் சேவை குறித்தும், சமூக சேவையின் அவசியம் குறித்து சங்க ஒருங்கிணைப்பாளா் வெங்கட்ராமன் ஆகியோா் பேசினா். கல்லூரி பேராசிரியா் எஸ்.மோகன்குமாரமங்கலம் வரவேற்றாா். உடற்கல்வி இயக்குநா் எஸ்.சுபஸ்ரீ நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடுதலைப் புலிகள் மீதான தடை நீட்டிப்பு: பழ.நெடுமாறன் கண்டனம்

சுவா் இடிந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

சுங்கச்சாவடி அருகே குழந்தை மீட்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் வட ஏரிகளை ஆழப்படுத்த நடவடிக்கை: ஆட்சியா்

பாடலாத்திரி நரசிம்ம பெருமாள் கோயில் கருடசேவை

SCROLL FOR NEXT