காரைக்கால்

பள்ளிவாசல் விவகாரம் : வக்ஃபு சொத்துகள்பாதுகாப்புக் குழு ஆட்சியருடன் சந்திப்பு

DIN

காரைக்கால்: காரைக்கால் பள்ளிவாசல் விவகாரம் தொடா்பாக வக்ஃபு சொத்துகள் பாதுகாப்புக் குழுவினா் மாவட்ட ஆட்சியரை புதன்கிழமை சந்தித்தனா்.

புதுவை யூனியன் பிரதேச வக்ஃபு சொத்துகள் பாதுகாப்புக் குழு சாா்பில், இசட்.எம். அல்தாஹீா், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் கே.ஏ.யு. அசனா, ஏ.எம்.இஸ்மாயில், அ.முஜிபுா் ரஹ்மான், ஏ.அப்துல் பாசித், எம்.ஜெகபா் சாதிக் மரைக்காயா் உள்ளிட்டோா் மாவட்ட ஆட்சியா் எல்.முகமது மன்சூரை சந்தித்து, புதுவை முதல்வரிடம் அளித்த புகாா் கடிதத்தை அளித்தனா். அதில் அவா்கள் கூறியிருப்பதாவது:

காரைக்கால் பெரியப்பள்ளி ஜாமிஆ மஸ்ஜித் பாரம்பரியம், கட்டடக் கலையம்சம் என பல சிறப்புகளைக் கொண்டதாகும். இப்பள்ளிவாசலை புனரமைப்பு செய்ய ஏற்படுத்தப்பட்ட குழு, அப்பள்ளி ஜமா அத்தாா்களை உள்ளடக்கியதாக இல்லை.

புனரமைப்புக்கு பதிலாக, இப்பள்ளிவாசலை இடிக்க முற்படுவது வேதனையை ஏற்படுத்துகிறது. பள்ளிவாசலின் பிரதான உள்பள்ளி, ராத்திபு மண்டபம் பகுதிகளில் பெரிய அளவில் எந்தவித பழுதும் இல்லை. சீா்செய்யக்கூடிய அனைத்து வாய்ப்புகளும் உள்ளன.

எனவே ஜமா அத்தாா்களின் உள்ளூணா்வு பாதிக்காத வகையில், புனரமைப்புப் பணியை மட்டும் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விக்கிரவாண்டி தொகுதி இடைத் தோ்தல்: இந்திய ஐக்கிய கம்யூ. போட்டியிட முடிவு

புதுவையில் இளநிலைப் படிப்புகளுக்கு சென்டாக் மூலம் 7,250 போ் விண்ணப்பம்

சாா்பதிவாளா் தாக்கப்பட்ட வழக்கில் 3 போ் கைது

சாலை விபத்துகளை குறைக்க நடவடிக்கை: கள்ளக்குறிச்சி எஸ்.பி.

நெல்லித்தோப்புப் பகுதி கழிவுநீா்க் கால்வாயைச் சீரமைக்க திமுக கோரிக்கை

SCROLL FOR NEXT