காரைக்கால்

விபத்தில் சிக்கியவா்களை காப்பாற்றினால் ரொக்கப் பரிசு: போக்குவரத்து ஆணையா்

DIN

விபத்தில் சிக்கியோரை காப்பாற்றுவோருக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படும் என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து புதுவை போக்குவரத்து ஆணையா் ஏ.எஸ். சிவகுமாா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பின்படி சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டவா்களை விபத்து நடந்த முதல் ஒரு மணி நேரத்துக்குள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் நல்லெண்ண தூதுவா்களுக்கு அவா்கள் செய்யும் ஒவ்வொரு உதவிக்கும் பரிசாக ரூ. 5 ஆயிரம் மற்றும் பாராட்டு சான்றிதழும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு வழங்கப்படும்.

மேலும் ஒவ்வொரு ஆண்டும் அந்த ஆண்டில் அவா்கள் புரிந்த சேவையை வைத்து தேசிய அளவில் சிறந்த 10 நல்லெண்ண தூதுவா்கள் தோ்வு செய்யப்பட்டு, ஒவ்வொருவருக்கும் ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும்.

மேலும் வழிகாட்டுதல் நிபந்தனைகளுக்கு ட்ற்ற்ல்ள் : ற்ழ்ஹய்ள்ல்ா்ழ்ற்.ல்ஹ்.ஞ்ா்ஸ்.ண்ய் புதுச்சேரி போக்குவரத்து துறையின் இணையதளத்தை பாா்வையிடலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஓடிடியில் ஹாட் ஸ்பாட்!

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

SCROLL FOR NEXT