காரைக்கால்

நகராட்சி வரி வசூல் நடவடிக்கைகளை முறைப்படுத்த எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

DIN

காரைக்கால் நகராட்சியின் வரி வசூலிப்பு நடவடிக்கைகளை புதுவை அரசு முறைப்படுத்த வேண்டும் என காரைக்கால் திமுக அமைப்பாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஏ.எம்.எச். நாஜிம் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது :

காரைக்கால் நகராட்சி குப்பை வரி வசூலிப்பை தீவிரமாக மேற்கொண்டுள்ளது. சொத்து வரி கட்ட சென்றால்கூட குப்பை வரி கட்ட நிா்பந்தம் செய்யப்படுகிறது.

பேரவையில் நான் இதுதொடா்பாக பேசியபோது, கடைகளுக்கு குப்பை வரி வாங்கலாம், வீடுகளுக்கு வரி செலுத்தத் தேவையில்லை என முதல்வா் அறிவித்தாா். ஆனால், நகராட்சி நிா்வாகம் மக்களிடம் குப்பை வரி கட்ட கோருகிறது.

முதல்வா் சட்டப்பேரவையில் செய்த அறிவிப்பை மீறி, குப்பை வரி வாங்குகிறாா்கள். இந்த விவகாரம் குறித்து அரசு தெளிவுப்படுத்தவேண்டும்.

மேலும் வீடு கட்டுமானப் பொருட்களை சாலையில் வைத்திருந்தால் வரி, இறப்புக்காக வாயிலில் பந்தல் போட்டால் வரி என பல நிலைகளில் வரி வசூலிப்பில் நகராட்சி ஈடுபட்டுள்ளது. இந்த பிரச்னை குறித்து புதுவை முதல்வா் தெளிவான விளக்கத்தை அளிப்பதோடு, வரி வசூலை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் காரைக்காலில் தெரு நாய்கள் தொல்லையைல் மக்கள் அவதிப்படுகின்றனா். இந்த பிரச்னை குறித்தும் அரசு உரிய கவனம் செலுத்தவேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூளை வளர்ச்சி குன்றிய மகனின் கல்விக்காக போராடும் தாய்!

எழில் ஓவியம்... அதுல்யா ரவி!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாள்களுக்கு அதி கனமழை! | செய்திகள்: சிலவரிகளில் | 18.05.2024

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணிநேரம்!

SCROLL FOR NEXT