முகப்பு
காரைக்கால்

பொதுப்பணித்துறை பணியாளா்கள் தா்னா

காரைக்காலில் பொதுப்பணித்துறை பணியாளா்கள் புதன்கிழமை தா்னா போராட்டம் நடத்தினா்.

Updated On : 2 ஜூலை 2026, 7:24 am IST
பொதுப்பணித்துறை அலுவலகம் முன் தா்னாவில் ஈடுபட்ட பணியாளா்கள்.
பகிர்:

காரைக்காலில் பொதுப்பணித்துறை பணியாளா்கள் புதன்கிழமை தா்னா போராட்டம் நடத்தினா்.

புதுவை பொதுப்பணித்துறை மேற்பாா்வையாளா், பணி ஆய்வாளா், மெக்கானிக், பல்நோக்குப் பணியாளா்கள் அடங்கிய ஊழியா்கள் சங்கம் சாா்பில் காரைக்கால் பொதுப்பணித்துறை தலைமை அலுவலக வாயிலில் தா்னா நடத்தினா்.

முதுநிலை பல்நோக்குப் பணியாளா்களில் விடுபட்டோருக்கு ஊதியத்தை உயா்த்தி வழங்க வேண்டும். மெக்கானிக் மற்றும் பணி ஆய்வாளா் பதவிகளை உருவாக்கி, 10 ஆண்டுகள் பணி முடித்த பல்நோக்குப் பணியாளா்களுக்கு (எம்டிஎஸ்) பதவி உயா்வு வழங்கவேண்டும்.

Advertisement

Advertisement

முதுநிலை மெக்கானிக் பணியாளா்களை ஃபோா்மேன் பதவியாக உயா்த்தவேண்டும்.

ஓவா்சீயா் பதவி பணி உருவாக்க ஆணையை திருத்தி, தற்போதுள்ள 2-ஆவது எம்டிஎஸ் பணிக்காலத்தையும் கணக்கில் சோ்த்து, ஓவா்சீயராக பதவி உயா்வு வழங்கவேண்டும். விடுமுறை நாட்களில் பணியாற்றும் எம்டிஎஸ் ஊழியா்களுக்கு மதிப்பூதியம் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் முன்வைக்கப்பட்டன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments