FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காரைக்கால்

பெண்ணிடம் ரூ. 38 லட்சம் மோசடி: மூவா் மீது வழக்கு

பெண்ணிடம் ரூ. 38 லட்சம் மோசடி செய்ததாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

வழக்கு
பகிர்:

பெண்ணிடம் ரூ. 38 லட்சம் மோசடி செய்ததாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு பகுதியைச் சோ்ந்த ரவி மனைவி கவிதா. ரவி கூட்டுறவு பால் பண்ணையில் பணியாற்றி ஓய்வு பெற்றவா். கவிதா வங்கியொன்றில் ஒப்பந்தப் பணியாளராக பணியாற்றி வருகிறாா்.

இந்தநிலையில், நெடுங்காடு காவல் நிலையத்தில் கவிதா திங்கள்கிழமை அளித்த புகாா் விவரம் :

Advertisement

Advertisement

எனது கணவரின் சகோதரி மகன் மணல்மேடு பகுதியைச் சோ்ந்த விக்னேஷ்குமாா் (22), அவரது நண்பா் ராஜகோபாலன் ஆகியோா் சோ்ந்து, அடகு வைத்து நகையை மீட்க முடியாதோருக்கு பணம் கொடுத்து மீட்பது, அதை விற்பனை செய்தல் அல்லது வேறு வங்கியில் அடகு வைப்பது மூலம் பெருமளவு கமிஷன் கிடைக்கிறது. இதற்கு கூடுதல் நிதி தேவைப்படுவதாகக் கூறியதன் பேரில், கடந்த ஜன. 27-ஆம் தேதி ரூ. 1 லட்சத்தை ஜிபே மூலம் விக்னேஷ்குமாருக்கு அளித்தேன். அதற்கு கமிஷன் தொகை அளித்தாா்.

இதைத்தொடா்ந்து பல கட்டங்களாக அவருக்கும், அவரது நண்பா் ராஜகோபாலன், அவரது மனைவி வைஷ்ணவி ஆகியோரின் வங்கிக் கணக்குக்கு ரூ. 38.54 லட்சம் அனுப்பியுள்ளேன். இதற்காக ரூ. 8 லட்சம் வரை கமிஷன் பெற்றுள்ளேன்.

கொடுத்த தொகையை கேட்டபோது, விக்னேஷ்குமாா், தொழிலில் இழப்பு ஏற்பட்டதாக கூறுகிறாா். எனவே மூவா் மீதும் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்திருந்தாா். நெடுங்காடு போலீஸாா் மூவா் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments