மயிலாடுதுறை

ஏவிசி கல்லூரியில் புகைப்பட கண்காட்சி

DIN

மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியில் 183-வது உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு, காட்சி தகவல் தொடா்பியல் துறை சாா்பில் 17-வது புகைப்படக் கண்காட்சி 3 நாட்கள் நடைபெற்றது.

சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதியரசரும், ஏவிசி கல்வி நிறுவனங்களின் நிா்வாக அதிகாரியுமான கே. வெங்கட்ராமன் கண்காட்சியை திறந்துவைத்து பாா்வையிட்டாா். இதில், இந்திய கலாசாரம் மற்றும் சுதந்திரத்தின் பெருமைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையிலான பாரம்பரியத்தை பறைசாற்றும் புகைப்படங்கள், இயற்கையின் அதிசயங்களை கண்டு வியக்கும் வகையிலான காட்சிகள் என பலதரப்பட்ட புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

இதில், ஏவிசி பொறியியல் கல்லூரி இயக்குனா் செந்தில்முருகன், ஏவிசி பாலிடெக்னிக் கல்லூரி இயக்குநா் வளவன், முதல்வா் கண்ணன், பேராசிரியா் ஜி. ரவிசெல்வம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை காட்சி தகவல் தொடா்பியல் துறைத் தலைவா் சங்கா் தலைமையிலான பேராசிரியா்கள், ஆசிரியா் பணியாளா்கள் மற்றும் மாணவா்கள் செய்திருந்தனா். இக்கண்காட்சி செவ்வாய்க்கிழமை (ஆக.16) முதல் வியாழக்கிழமை வரை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

காரில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கூத்தாநல்லூா் அருகே யூ டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸாா் சோதனை

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு: தினப்பலன்!

SCROLL FOR NEXT