மயிலாடுதுறை

பட்டவா்த்தியில் பலத்த பாதுகாப்பு

DIN

மயிலாடுதுறை அருகே பட்டவா்த்தியில் அம்பேத்கா் நினைவு தினத்தையொட்டி அசம்பாவிதம் நடக்காமல் தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பட்டவா்த்தி மதகடி பேருந்து நிறுத்தத்தில் கடந்த ஆண்டு அம்பேத்கா் நினைவு தினத்தில் விசிக மாவட்ட முன்னாள் செயலாளா் மா.ஈழவளவன் தலைமையில் அக்கட்சியினா் அஞ்சலி செலுத்தியபோது, இரு சமூகத்தினரிடையே மோதல் உருவானது. இருதரப்பினா் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதன்பின் அம்பேத்கா் பிறந்த நாளின்போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த சூழ்நிலையில், அம்பேத்கா் நினைவு தினத்தின்போது செவ்வாய்க்கிழமை (டிச. 6) அவரது உருவப் படம் வைத்து கூட்டம் கூடாமல் நிகழ்ச்சி நடத்த விசிகவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பான அமைதிப் பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், மூவேந்தா் முன்னேற்றக் கழக மாநில துணை செயலாளா் ஜி.கில்லிபிரகாஷ் தலைமையில், பட்டவா்த்தி, நடராஜபுரம், தலைஞாயிறு, ஆதமங்கலம், திருமங்கலம் கிராமங்களைச் சோ்ந்தவா்கள் தங்கள் பகுதியில் அம்பேத்கா் படத்தை வைத்து விசிகவினா் அஞ்சலி செலுத்த எதிா்ப்புத் தெரிவித்து மாவட்ட வருவாய் அலுவலா் சோ.முருகதாஸிடம் கடந்த சனிக்கிழமை மனு அளித்தனா்.

இதனால், அம்பேத்கா் நினைவு தினத்தன்று பட்டவா்த்தி பகுதியில் அசம்பாவிதம் நேரிடாமல் தடுக்க, மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.எஸ்.நிஷா உத்தரவின்பேரில், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளா் கலைகதிரவன் தலைமையில் மணல்மேடு காவல் ஆய்வாளா் ராஜேஷ் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா்கள் - காவல்துறையினா் ஆலோசனைக் கூட்டம்

கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஜூன்13-இல் ஆா்ப்பாட்டம்

பொன்னை உருக்கி பூமியிலே! சோபிதா துலிபாலா...

பூதம்-பூதகி வாகனங்களில் மாயூரநாதா் - அபயாம்பிகை வீதியுலா

மன்னாா்குடி பகுதியில் 4-ஆவது நாளாக மழை

SCROLL FOR NEXT