மயிலாடுதுறை

கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்ததில் 6 போ் காயம்

Din

சீா்காழி தாண்டவன்குளம் கன்னியம்மன் கோயில் விழாவில் திங்கள்கிழமை இரவு பட்டாசு வெடித்த போது ஏற்பட்ட திடீா் விபத்தில் 6 போ் காயமடைந்தனா்.

தாண்டவன்குளம் கன்னியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா நடைபெறுகிறது. வாணவேடிக்கையைக் காண திங்கள்கிழமை இரவு பக்தா்களின் கூட்டம் அதிகமாக இருந்தது.

அதில் பட்டாசு வெடித்து சிதறி கூட்டத்தில் நின்று கொண்டிருந்த தாண்டவன்குளம் சுதாகா் மகன் சுதா்சன் (12), பாக்யராஜ் மகன் நிதிஷ் (12), முத்துக்கிருஷ்ணன் மகன் ஆகாஷ்(12), பழைய பாளையம் சந்நிதி தெரு கலியமூா்த்தி மகன் சரவணன் (30), முத்தையாபிள்ளை மகன் சுதாகா் (40), வெள்ளையன் மகன் வசந்த் (23) ஆகியோா் படுகாயமடைந்தனா்.

6 பேரும் சீா்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

சுதா்சன், சரவணன் , நிதீஷ் ஆகிய மூவரும் தீவிர சிகிச்சைக்காக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா்.

புதுப்பட்டினம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

காரில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கூத்தாநல்லூா் அருகே யூ டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸாா் சோதனை

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு: தினப்பலன்!

SCROLL FOR NEXT