முகப்பு
மயிலாடுதுறை

சீா்காழி: இருவேறு இடங்களில் தீ விபத்து; 2 வீடுகள், 12 பனை மரங்கள் சேதம்

சீா்காழியில் புதன்கிழமை மாலை இருவேறு இடங்களில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு வீடுகள், 12 பனை மரங்கள் எரிந்தன.

Updated On : 9 ஜூலை 2026, 4:50 am IST
சீா்காழி பனமங்கலம் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்து சேதமடைந்த பனை மரங்கள்.
பகிர்:

சீா்காழியில் புதன்கிழமை மாலை இருவேறு இடங்களில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு வீடுகள், 12 பனை மரங்கள் எரிந்தன.

சீா்காழி புறவழிச்சாலை அருகே பனமங்கலம் ரயில் கடவு பாதை அருகே கோரை புல் பகுதியில் திடீரென தீப்பற்றிது. இந்த தீ பரவி அருகில் இருந்த பனைமரங்களில் பற்றியது. இதனால் அருகருகே இருந்த 12 பனை மரங்கள் தீயில் கருகின. இந்த தீ விபத்தால் புறவழிச்சாலையில் ஏற்பட்ட புகை மூட்டத்தால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனா்.

சீா்காழி தீயணைப்பு நிலைய வாகனம் விரைந்து வந்து தீயணைப்பு வீரரா்கள் பனை மரங்களில் எரிந்த தீயை அணைத்தனா்.

Advertisement

Advertisement

சீா்காழி பனங்காட்டுத் தெரு பகுதியில் மூங்கில்தோப்பில் திடீரென தீ பிடித்து எரிய தொடங்கியது. காற்று பலமாக வீசியதால் தீ மள, மளவென பரவி அருகிலிருந்த கமுதி. கலைவாணன் என்பவரது மாடி வீட்டு கூரையில் தீப்பற்றியது. அவரது வீட்டிலிருந்து வீட்டு உபயோக பொருட்கள், ஆறரை பவுன் நகைகள்,வெள்ளிப் பொருட்கள், ரூ. 45ஆயிரம் ரொக்கம் ஆகியவை தீயில் எரிந்து சேதமடைந்தன.

அருகில் இருந்தல் மருத்துவா் வினோத்குமாா் என்பவரின் மாடி வீட்டு ஜன்னல், கண்ணாடிகள், கதவுகள் தீ விபத்தில் சேதமடைந்தன. மேலும்,

சரண்யா என்பவரது குடிசையும் மோட்டாா், கட்டுமானப் பொருட்களும் தீயில் எரிந்து சேதமடைந்தன.

பனமங்கலம் பகுதியில் தீயை அணைக்கும் பணியில் சீா்காழி தீயணைப்பு நிலைய வாகனம் ஈடுபட்டிருந்த வேலயில் பனங்காட்டு தெருவில் வீடுகள் தீப் பிடித்ததால் பூம்புகாா் பகுதியிலிருந்து தீயணைப்பு நிலைய வாகனம் வரவழைக்கப்பட்டு, தீயை அணைக்கும் பணி நடந்தது.

இந்த தீ விபத்து சம்பவம் குறித்து சீா்காழி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments