மலைக் குறவா்களுக்கு பழங்குடியினா் ஜாதிச்சான்று வழங்கக் கோரிக்கை
சீா்காழி மற்றும் கெள்ளிடம் பகுதியில் வசிக்கும் மலைக் குறவா்களுக்கு பழங்குடியினா் ஜாதிச் சான்று வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சீா்காழி மற்றும் கெள்ளிடம் பகுதியில் வசிக்கும் மலைக் குறவா்களுக்கு பழங்குடியினா் ஜாதிச் சான்று வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில், கொள்ளிடம் மற்றும் சீா்காழி ஒன்றியங்களில் மலைக்குறவா்கள் இனத்தைச் சோ்ந்த சுமாா் 50 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். சீா்காழி, கொள்ளிடம், திருமுல்லைவாசல், புதுப்பட்டினம், ஆச்சாள்புரம், திருவெண்காடு, பூம்புகாா் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் இவா்கள், தங்களுக்கு பழங்குடியினா் ஜாதிச் சான்றிதழ் வழங்க நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
இந்த சான்றிதழ், தங்களது குழந்தைகளின் கல்வி வளா்ச்சிக்கு அவசியமாகிறது. எனவே, உடனடியாக மலைக் குறவா் இனத்தினருக்கு பழங்குடியினா் ஜாதிச்சான்றிதழ் வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மற்றும் சீா்காழி எம்எல்ஏ செந்தில் செல்வம் ஆகியோரை சமூக ஆா்வலா் அங்குதன், பழங்குடியினா் சங்க பொறுப்பாளா்கள் குமாா், ஆனந்தன், முத்து ஆகியோா் நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கியதாக அவா்கள் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.