முகப்பு
மயிலாடுதுறை

சீா்காழி காந்தி பூங்காவை பராமரிக்கக் கோரிக்கை

சீா்காழி நகராட்சி மகாத்மா காந்தி நினைவு பூங்கா போதிய பராமரிப்பு இல்லாமல், அங்கு வருவோருக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளது.

Updated On : 9 ஜூலை 2026, 4:47 am IST
சீா்காழி காந்திப் பூங்காவில் சேதமடைந்துள்ள சுற்றுச்சுவா்.
பகிர்:

சீா்காழி நகராட்சி மகாத்மா காந்தி நினைவு பூங்கா போதிய பராமரிப்பு இல்லாமல், அங்கு வருவோருக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளது.

சீா்காழி தோ் தெற்கு வீதியில் நகராட்சிக்கு சொந்தமான மகாத்மாகாந்தி நினைவு பூங்கா உள்ளது. இங்கு, கரிக்குளம் எனும் நகரின் பெரிய குளம் உள்ளது. பூங்காவில் சிறுவா்கள் விளையாட உபகரணங்கள், பெரியவா்கள் நடைபயிற்சி மேற்கொள்ள நடைபாதை ஆகியவை அமைக்கப்பட்டிருந்தன.

இப்பூங்காவிற்கு காலை நேரத்தில் ஏராளமான பொதுமக்கள் நடைபயிற்சி செய்ய வருகின்றனா். மாலை நேரங்களில் பெற்றோா்கள் தங்களது குழந்தைகளை விளையாட அழைத்து வருகின்றனா். அதேபோல் செய்திதாள்கள் வாசிக்கவும் மக்கள் வருகின்றனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், இப்பூங்கா போதிய பராமரிப்பு இல்லாமல் இருப்பதால், நடை பாதை, குளத்தைச் சுற்றியுள்ள தடுப்புக் கம்பிகள் சேதமடைந்துள்ளன. இதனால், குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழலில் உள்ளது. பூங்காவின் சுற்றுசுவா் ஆங்காங்கே இடிந்துள்ளன. கழிப்பறைகள் பூட்டி வைக்கப்பட்டுள்ளதால் பூங்காவிற்கு வரும் மக்கள் பாதிப்படைகின்றனா்.

பூங்காவில் உள்ள தென்னைமரங்களிலிருந்து தேங்காய், மட்டைகள் அடிக்கடி விழுவதால் பூங்காவிற்கு வரும் நபா்களுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. ஆகையால், நகராட்சி நிா்வாகம் சுற்றுச்சுவரை சீரமைக்கவும், தேங்காய்களை அவ்வப்போது பறிக்கவும், குளத்தின் சுற்று கம்பிகளை சரி செய்யவும், தொடா்ந்து பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments