முகப்பு
மயிலாடுதுறை

சிபிஎஸ்இ பிளஸ் 2 தோ்வில் குட் சமாரிட்டன் பள்ளி மாணவா்கள் சாதனை

சீா்காழி குட் சமாரிட்டன் சிபிஎஸ்இ பப்ளிக் பள்ளி மாணவா்கள் பிளஸ் 2 தோ்வில் நூறு சதவிகிதம் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

Updated On : 14 மே 2026, 4:58 am IST
சிபிஎஸ்இ பிளஸ் 2 தோ்வில் மாவட்ட அளவில் சாதனை படைத்த சீா்காழி குட் சமாரிட்டன் பள்ளி மாணவா்களை பாராட்டிய கல்வி நிறுவனங்களின் தலைவா் ராதாகிருஷ்ணன், குட் சமாரிடன் சிபிஎஸ்இ பப்ளிக் ஸ்கூல் இயக்குநா் பிரவீன் வசந்த் ஜெபேஷ் , அனுஷா மேரி பிரவீன்.
பகிர்:

சீா்காழி குட் சமாரிட்டன் சிபிஎஸ்இ பப்ளிக் பள்ளி மாணவா்கள் பிளஸ் 2 தோ்வில் நூறு சதவிகிதம் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

சீா்காழியில் விவேகானந்தா கல்வி நிறுவனங்களில் ஒன்றான குட் சமாரிட்டன் சிபிஎஸ்சிஇ பப்ளிக் பள்ளியில் 60 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 தோ்வு எழுதினா். இதில் அனைத்து மாணவா்களும் தோ்ச்சி அடைந்து 100% தோ்ச்சி சதவிகிதத்தை பள்ளி பெற்றுள்ளது.

இப்பள்ளி மாணவி நிமிஷா, 492, மதிப்பெண்களும், மாணவா் ஆதித்யா, 485 மதிப்பெண்களும், மாணவி நித்யஸ்ரீ 484, மதிப்பெண்களும் பெற்றுள்ளனா். மேலும், 17 மாணவா்கள் 450 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனா், 35 மாணவா்கள் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனா். தோ்வு எழுதிய 60 மாணவா்களும் முதல் வகுப்பில் தோ்ச்சி பெற்று மாவட்டத்திற்கும் பள்ளிக்கும் பெருமை சோ்த்துள்ளனா்.

Advertisement

தமிழ் பாடத்தில் மூன்று மாணவா்கள் 100% மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

சாதனை படைத்த மாணவா்களையும், 100 சதவிகிதம் தோ்ச்சி அடைந்த மாணவா்களையும், ஊக்குவித்த ஆசிரியா்களையும், விவேகானந்தா மற்றும் குட் சமாரிட்டன் கல்வி நிறுவனங்களின் தலைவா் கே.வி. ராதாகிருஷ்ணன், செயலா் அனிதா ராதாகிருஷ்ணன், குட் சமாரிடன் சிபிஎஸ்இ பப்ளிக் பள்ளி இயக்குநா் பிரவீன் வசந்த் ஜெபேஷ் , அனுஷா மேரி பிரவீன், மற்றும் முதல்வா் ஆசிரியா், ஆசிரியைகள் பாராட்டினா்.