முகப்பு
நாகப்பட்டினம்

நாகையில் ஜூன் 27-ல்ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்

நாகை மாவட்ட ஓய்வூதியர் குறைதீர் கூட்டம், ஆட்சியரகத்தில் ஜூன் 27-ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறும் என ஆட்சியர் து. முனுசாமி தெரிவித்தார்.

Updated On : 12 மே 2013, 6:34 am IST
பகிர்:

நாகை மாவட்ட ஓய்வூதியர் குறைதீர் கூட்டம், ஆட்சியரகத்தில் ஜூன் 27-ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறும் என ஆட்சியர் து. முனுசாமி தெரிவித்தார்.

நாகை மாவட்டத்தில் மாநில அரசுத் துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியர்களில், ஓய்வூதியப் பயன் கிடைக்கப் பெறாதவர்களின் குறைகளைக் கேட்டறிந்து தீர்க்கும் வகையில் நடைபெறும் இக்கூட்டத்தில், சென்னை ஓய்வூதிய இயக்குநர் பங்கேற்கிறார்.

ஓய்வூதியப் பயன் கிடைக்கப் பெறாதவர்கள், தங்களது குறைகளை இரட்டைப் பிரதிகளில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு), மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நாகப்பட்டினம் என்ற முகவரிக்கு ஜூன் 10-ம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

Advertisement

Advertisement

மனுக்கள் தெளிவான கையெழுத்திலிருக்க வேண்டும் அல்லது தட்டச்சு செய்யப்பட்டிருக்க வேண்டும். பெயர், பதவி மற்றும் முகவரி, ஓய்வுபெறும் போது பணியாற்றிய அலுவலகம், ஓய்வு பெற்ற தேதி, ஓய்வூதியக் குறை விவரம், குறைகள் எந்த அலுவலகத்தில் எந்த அலுவலரிடத்தில் நிலுவையில் உள்ளது என்பதை மனுவில் குறிப்பிட வேண்டும்.

மின்சாரம், போக்குவரத்துக்கழகம், நூற்பாலை ஆகியவற்றில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் தங்களது மனுக்களை நேரடியாக தொடர்புடைய உயர் அலுவலர்களுக்கு அனுப்ப வேண்டும் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.