நாகப்பட்டினம்

பூட்டிக் கிடக்கும் வேளாண்மை அலுவலகத்தை திறக்கக் கோரிக்கை

DIN

மேலையூரில் பூட்டிக்கிடக்கும் அரசு உதவி வேளாண்மை அலுவலகத்தைத் திறந்து பயன்பாட்டுக்குக் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
பூம்புகார் மேலையூரில் உள்ள அரசு உதவி வேளாண்மை அலுவலகம் பல ஆண்டுகளாக திறக்காமல் உள்ளது. இதனால் இப்பகுதி விவசாயிகள் பயிர் சம்பந்தமாக குறைகளைக் கேட்டறிய முடியாமல் உள்ளது.  இந்த அலுவலகம் எப்போதும் பூட்டியே கிடப்பதால் தனியார்களின் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது. இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக உள்ளது. 
இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறியது: வேளாண்மை அலுவலகம் மிகவும் சிதிலமடைந்து உள்ளது.  விவசாயிகளின் நலன் கருதி இந்த உதவி வேளாண் அலுவலகத்தை திறக்க வேண்டும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பறக்கும் ரயில் சேவை.. ஆகஸ்ட் முதல்

அரசுப் பள்ளி மாணவர்களுடன் பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT