முகப்பு
நாகப்பட்டினம்

குளத்தில் மூழ்கி முதியவர் சாவு

சீர்காழி அருகேயுள்ள கடவாசல் கிராமத்தில் முதியவர் ஒருவர் குளத்தில் மூழ்கி உயிரிழந்தார்.

Updated On : 5 ஏப்ரல் 2018, 9:47 am IST
பகிர்:

சீர்காழி அருகேயுள்ள கடவாசல் கிராமத்தில் முதியவர் ஒருவர் குளத்தில் மூழ்கி உயிரிழந்தார்.
கடவாசல் கிராமம் மேலத்தெருவைச் சேர்ந்தவர் கண்ணையன் (65). விவசாயி. இவர் அங்குள்ள ஈஸ்வரன் கோயில் குளத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை குளித்துக்  கொண்டிருந்தார். அப்போது, சேரும், சகதியுமான இடத்தில் சிக்கிய அவர், தண்ணீரில் மூழ்கி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது மகன் கார்த்திக் (30) அளித்த புகாரின்பேரில், புதுப்பட்டினம் காவல் ஆய்வாளர் முருசேகன் வழக்குப் பதிந்து கண்ணையனின் உடலைக் கைப்பற்றி சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments