முகப்பு
நாகப்பட்டினம்

வன்கொடுமை தடுப்புச் சட்ட மாற்றத்தை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் மாற்றம் செய்யப்படுவதைக் கண்டித்து மயிலாடுதுறையில் காங்கிரஸ் கட்சியினர் புதன்கிழமை

Updated On : 5 ஏப்ரல் 2018, 9:48 am IST
பகிர்:

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் மாற்றம் செய்யப்படுவதைக் கண்டித்து மயிலாடுதுறையில் காங்கிரஸ் கட்சியினர் புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தலைமை தபால் நிலையம் முன்பு கட்சியின் நாகை வடக்கு மாவட்டத் தலைவர் எஸ். ராஜகுமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் மாற்றம் செய்யப்படுவதைக் கண்டித்தும், மத்திய அரசைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், எஸ்.சி. பிரிவு மாவட்டத் தலைவர் கோவி. மதிவாணன், நகரத் தலைவர் ஆர். ராமானுஜம், மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் முஹம்மது நவாஸ், மாவட்டத் துணைத் தலைவர் பத்மநாபன், மாவட்டச் செயலர்கள் செல்வராஜ், வடவீரபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments